தனது மகளையும் பேரக் குழந்தையையும் கண்டவுடன் நடக்க முடியாத வயது முதியவர் ஒருவர் ஊண்டு கோலையும் வீசி விட்டு பாசத்தில் ஓடியுள்ளார்.

இந்த காட்சி சமூகவலைத்தளத்தில் தற்போது வைரலாகியுள்ளது. அது மாத்திரம் இன்றி, பார்ப்பவர்களை நெகிழ வைத்துள்ளது.

இதேவேளை, வயதானவர்கள் பூமிக்குப் பாரம் என்று கூறி அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு, பின்பு உண்மையை உணர்ந்து மனம் வருந்திய மன்னனின் கதைகளைப் படித்திருந்தாலும், அந்த உண்மையை உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் மனநிலை இன்றி இன்று நாம் வாழ்ந்து வருகிறோம்.

தற்காலத்திய சூழலில் நகரப்புறங்களில் வாழும் வயதானவர்களாவது, மாறிவரும் கலாச்சார மாற்றங்களுக்கு ஏற்ப தங்களின் வாழ்க்கை சூழல்களை மாற்றிக் கொள்ளத் தலைப்படுகின்றார்கள்.

ஆனால் கிராமப்புற வாழ் வயதானவர்களின் நிலையை நினைத்தால் கவலை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

தான் பெற்ற மகனோ மகளோ நகர்ப்புறங்களிலோ, வெளிநாடுகளிலோ வாழ நேரும்போது, வயதானவர்களுக்கு தங்கள் கணவனோ, மனைவியோ தான் துணை. ஆனால் அந்தத் துணையும் தன்னுடன் இல்லாத சூழல் ஏற்படும்போது தனிமை என்பது தவிர்க்க இயலாததாக உள்ளது.

இந்த முதியவரின் பாசத்தின் வெளிப்பாடும் பல நாள் ஏக்கத்தின் வெளிப்பாடாகவே உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.