பிரபல திரைப்பட நடிகரான விஜய் இலங்கையில் வாங்கிய சொத்துகளுக்கு ஆபத்து இருப்பதாக கூறி, புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜயின் மனைவியான சங்கீதா ஈழகுடும்பத்தை சேர்ந்தவர்.

இந்நிலையில், மனைவியான சங்கீதாவின் உறவினர்கள் மூலம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் விஜய் இலங்கையின் தலைநகர் கொழும்புவில் சொத்துக்கள் வாங்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தற்போது அந்த சொத்துக்களை, சில சிங்கள முதலாளிகள் கைப்பற்ற முயல்வதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நடிகர் விஜய் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.