குழந்தைகள் ஒரு தேவதை போன்றவர்கள். அதனால் தான் அனைத்து குழந்தைகளும் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றனர்.

குழந்தைகளை வளர்ப்பது என்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல. அதிலும் அவர்களை நம் கட்டுக்குள் கொண்டுவருவது என்பது மிகவும் கடினமானது.

ஆனால் குழந்தைகளிடம் பொறுமையாகவும், அன்பாகவும், அவர்களுக்கு பிடித்தவாறு நடந்து கொண்டு அவர்களுக்கு எந்த ஒரு விஷயத்தைக் கற்றுக் கொடுத்தாலும், அவர்கள் நிச்சயம் காதைக் கொடுத்து கேட்டு புரிந்து கொண்டு நடப்பார்கள்.

மேலும் இதனால், குழந்தைகள் தங்கள் பெற்றோரை அளவுக்கு அதிகமாக நேசிக்க ஆரம்பிப்பதோடு, அவர்களுக்கு நெருங்கிய நண்பனாகவும் ஆக முடியும்.

இங்கு ஒரு பெண் குழந்தை தாய் கற்று கொடுத்த அனைத்தையும் அப்படியே நினைவு படுத்தி அழகு மிகு கொஞ்சும் குரலில் கூறுகின்றார். இந்த காட்சி கோடி கொடுத்தாலும் கிடைக்காத வரம்.