சிறுநீர் கழித்தபின் வலி ஏற்படுவதால் தனக்கு என்ன பிரச்சினை என்பதை அறிவதற்காக மருத்துவமனைக்கு சென்ற இளைஞர் ஒருவரின் வயிற்றுக்குள் கர்ப்பப்பை இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர் மருத்துவர்கள்.

அமெரிக்காவில் வாழும் Mikey Chanel (18) ஆணாக பிறந்தவர், ஆணாகவே வளர்க்கப்பட்டும் இருக்கிறார். வளரும்போது, ஒருவேளை தான் ஒரு திருநங்கையோ என்ற எண்ணம் அவ்வப்போது Mikey மனதில் வந்து போயிருக்கிறது.

இந்நிலையில்,சிறுநீர் கழித்தபின் வலி ஏற்படுவதால் மருத்துவரைக் காணச் சென்றுள்ளார் Mikey. Mikeyக்கு ஸ்கேன் செய்த மருத்துவர்கள், அவரது வயிற்றுக்குள் கருப்பை, கர்ப்பப்பை என பெண்ணுக்கான அனைத்து இனப்பெருக்க உறுப்புக்களும் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர்.

Mikeyயிடம் இந்த விடயத்தைக் கூற, மருத்துவர்கள் தன்னிடம் விளையாடுவதாக எண்ணியுள்ளார் அவர். ஆனால் ஸ்கேனைக் காட்டியபிறகு அது உண்மைதான் என்பதை நம்பியிருக்கிறார் அவர். அடுத்து நடந்ததுதான் முக்கிய திருப்பம்.

மருத்துவர்கள் Mikeyயிடம் அந்த பெண் இனப்பெருக்க உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிடலாம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால், வித்தியாசமான முடிவெடுத்தார் Mikey.

தான் சிறுவயதிலிருந்தே ஆணாக உணரவில்லை என்பதை நன்கறிந்த Mikeyக்கு எப்போதுமே குழந்தைகள் என்றால் மிகவும் பிரியம்.

அதுவும் தனக்கே குழந்தை பெற்றுக்கொள்ள இயலும் என்பதால், இனி பெண்ணாகவே வாழ்வது என முடிவு செய்த Mikey, செயற்கை கருவூட்டல் மூலம் கர்ப்பமடைந்துள்ளார்.

இருந்தாலும், அவருக்கு பெண்ணுறுப்பு இல்லை என்பதால், அவருக்கு சிசேரியன் முறையில்தான் குழந்தை பிறக்கும். தன்னை அவள் என்றே அழைக்கும் Mikey, இப்போதுதான் தான் ஒரு முழு பெண்ணாக உணர்வதாக தெரிவிக்கிறார்.