107 பேருடன் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்… அனைவரும் பலி! வெளியான கடைசி நிமிட வீடியோ காட்சிகள்

794

பாகிஸ்தானில் பயணிகள் விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் அரசின் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் லாகூர் நகரிலிருந்து 107 பேருடன் 99 பயணிகள், 8 ஊழியர்கள் என மொத்தம் 107 பேருடன் இன்று கராச்சி நகருக்கு புறப்பட்டு சென்றது.

விமாம் கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே வந்தபோது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.45 மணிக்கு தரையிறங்க ஒரு நிமிடம் இருந்தபோது, மலிர் பகுதியுள்ள மாடல் காலனி குடியுருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கிது.

விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 முதல் 8 வீடுகள் வரை சேதமடைந்துள்ளதாகவும், வீட்டில் குடியிருந்தவர்கள், விமானத்தில் இருந்தவர்களின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை.

ஆனால் விபத்து நடந்தவுடன் குறித்த பகுதிக்கு விரைந்த தீயணைப்பு படையினர் மற்றும் பொலிசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது விமானத்தில் இருந்த 107 பேரும் பலியாகிவிட்டதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

விமானம் லாகூர் நகரில் இருக்கும் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிரங்க மூன்றுக்கும் மேற்பட்ட முறை முயற்சித்ததாகவும், ஆனால் அது முடியாமல் போனதால், இந்த விபத்து ஏற்பட்டுவிட்டதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், விமானம் தனது முழுகட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக, விபத்துக்கு முன்னர் விமானி, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்ததாகவும், இந்த விபத்தில், விபத்தில் விமானத்தில் இருந்த 99 பயணிகள் மற்றும் எட்டு ஊழியர்கள் அனைவரும் இறந்துவிட்டதை கராச்சி மேயர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பொதுவாக விமானம் லாகூரில் இருந்து குறித்த விமான நிலையத்திற்கு வர 90 நிமிடங்கள் ஆகும், அதற்கு சிறிது நேரமே இருந்த நிலையில், விபத்தில் சிக்கியுள்ளது.

விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதால், இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளவர்கள் இராணுவத்தினர் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்கும் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி விமான விபத்தில் சிக்குவதற்கு முன்னர் சில நிமிடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட விடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக பாகிஸ்தானில் விமானப் போக்குவரத்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மீண்டும் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கப்பட்ட நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.