Home » மெட்டி ஒலி சீரியல் நடிகை தனமா இது? அடையாளம் தெரியாமல் பரிதாபமாக மாறிய புகைப்படம்

மெட்டி ஒலி சீரியல் நடிகை தனமா இது? அடையாளம் தெரியாமல் பரிதாபமாக மாறிய புகைப்படம்

by ftcnc
0 comment 640 views

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி இன்றும் மனதில் அழியாமல் இருக்கும் மெட்டி ஒலி சீரியலில் தனமாக நடித்தவரின் தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகின்றது.

மெட்டி ஒலி காவேரி

வைகாசி பொறந்தாச்சி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை காவேரி. பின்பு இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

பின்பு பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில், சீரியலில் களமிறங்கினார். அவ்வாறு திருமுருகன் இயக்கத்தில் உருவான மெட்டி ஒலி சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் மக்கள் மத்தியில் பயங்கர பிரபலமானார்.

பின்பு ரம்யாகிருஷ்ணன் உடன் வம்சம் சீரியலில் நடித்திருந்தார். பின்பு நடிப்பிலிருந்து ஒதுங்கிய அவர் சமீபத்தில் கேட்டி கொடுத்துள்ளது வைரலாகி வருகின்றது.

அடையாளம் தெரியாமல் மாறிய தனம்

இவர் வம்சம் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது இவரது தாய் இறந்துவிட்ட நிலையில், அப்பொழுது அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார்.

இத்துடன் தைராய்டு பிரச்சினை இருந்ததால் உடல் எடை அதிகமாகியுள்ளது. சில மருந்துகளால் எடை அதிகரித்ததால், அதனை நிறுத்தி பின்பு 8 கிலோ எடை குறைத்தாராம்.

தற்போது கிருஷ்ணகிரி அருகே பண்ணை வீடு ஒன்று வாங்கியுள்ள நிலையில், எப்பொழுதும் அங்கு தான் இருப்பாராம். சென்னைக்கு ஒரு வேலை விடயமாக வந்தவர் இங்கு ஒன்றரை வருடம் தாங்கியுள்ளாராம்.

தற்போது சீரியலில் நடிக்க ஆசையில்லை என்றும் விஜய் சேதுபதி, நயன்தாரா, விஜய் ஆண்டனி, சமுத்திரகனி இவர்களுடன் நடிக்க ஆசை. அது எந்தவொரு கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை.

தனது குடும்பம் ஒரு சினிமா குடும்பம் தான். டிரம்ஸ் சிவமணி தனது அப்பாவின் மாணவர் என்றும், ஆரம்பத்தில் சினிமாவில் நடித்த நான் தற்போது சில காரணங்களால் இவ்வாறு மாறியுள்ளேன் என்று கூறியுள்ளார். தற்போது இவர் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment