பிரபல இயக்குனரும், நடிகருமான சேரன் லாஸ்லியாவின் தந்தை ம ர ண செய்தி தன்னை உ லு க் குவதாக வேதனையுடன் கூறியுள்ளார்.

பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் உ யி ரி ழந்த நிலையில், லாஸ்லியாவுக்கு பலரும் தங்கள் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல இயக்குனரும், நடிகருமான சேர்ன் இந்த செய்தியை கேட்டு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், லாஸ்லியா.. தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும். இந்த செய்தி என்னையே உலுக்குகிறது.


எப்படித்தாங்குவாய் மகளே. சொல்ல முடியாத து ய ரில் துடிக்கும் உ னக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆ றுதல் சொல்வதென தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா இருந்த போது அவரை தன் மகள் போன்று நினைத்து பாசத்தை காட்டினார், வெளியில் வந்த பின்பும் இருவரும் அப்பா, மகள் போன்றே இருப்பதாக கூறி வந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.