தாய்லாந்தில் செயல்பட்டு வரும் காபிக் கடை ஒன்று கடந்த 114 ஆண்டுகளாக ஒரே சுவையில் காபி வழங்குவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தானி மாகாணத்தில் உள்ள பதூம் என்ற இடத்தில் செயல்பட்டு வருகிறது டியா யங்லி என்ற காபிக் கடை. 114 ஆண்டுகளாக 3 தலைமுறைகளைத் தாண்டி செயல்பட்டு வருகின்றது.

இந்தக் காபிக் கடையின் தற்போதைய உரிமையாளர் அனான்சாய், தொடங்கிய நாள் முதல் காபிக் கொட்டையை வறுத்து அரைத்து வாடிக்கையாளர்களுக்கு காபி வழங்கி வருவதாகப் பெருமையுடன் குறிப்பிடுகிறார்.

பழமை மாறாத கட்டடத்தில் செயல்பட்டு வந்தாலும், விலையில் பெரிய மாற்றமில்லாமல் 114 ஆண்டுகளாக ஒரே சுவையில் அங்கு காபி விற்பனையாகி வருகிறது.