ஒரு பெண்ணின் பிறந்த மாதத்தை வைத்து, அவர்களின் குணங்கள் எப்படி என்பதை பற்றிக் கூறிவிடலாம்.

ஜனவரி

ஜனவரி மாதம் பிறந்த பெண்கள் பேரார்வம் மற்றும் இலட்சியங்களை அதிகம் கொண்டவராகவும், எதிலும் தீவிரமாக இருப்பார். மேலும் இவர்கள் தங்கள் உணர்வை வெளிப்படையாக கூற மாட்டார்கள்.

பிப்ரவரி

பிப்ரவரி மாதத்தில் பிறந்த பெண்கள் சற்று ரொமான்டிக்காக இருப்பார்கள். இவர்களிடம் பொறுமை காத்து பழக வேண்டும், அவசரம் காட்ட கூடாது. மேலும் இவர்களை அனைவராலும் அவ்வளவு எளிதில் புரிந்துக் கொள்ள முடியாது.

மார்ச்

மார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் வலிமையாகவும், கவர்ச்சியாகவும் இருப்பார்கள். இவர்கள் எளிதில் அனைவரையும் ஈர்த்து விடுவார்கள். மேலும் இவர்கள் நேர்மை, ஆளுமை அதிகம் கொண்டவராக இருப்பதால், இவர்கள் எளிதில் காதலில் விழுந்து விட மாட்டார்கள்.

ஏப்ரல்

ஏப்ரல் மாதத்தில் பிறந்த பெண்கள் இராஜ தந்திரகளைக் கொண்டவர்கள். அனைவருடனும் மிக எளிதாக பழகி விடுவார்கள். இவர்களில் சிலர் பொறாமை குணமும் கொண்டவராக இருப்பார்கள். மேலும் இவர்கள் தன்னை முழுமையாக நம்பும் நபர்களிடம் மட்டுமே மனம் திறந்து பேசுவார்கள்.

மே

மே மதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் உறதியான விடாப்பிடியான குணம் கொண்டவர்கள். இவர்கள் நேர்மையாக பழகுவார்கள். மேலும் இவர்களுக்கு என்று தனிக் கோட்பாடுகளை வைத்திருப்பார்கள். இவர்களுடன் எளிதாக பழகி காதலில் விழ வைப்பது மிகவும் கடினம்.

ஜூன்

ஜூன் மாதத்தில் பிறந்த பெண்கள் எதிலும் அதிக ஆர்வம் மற்றும் கற்பனை திறன் கொண்டவர்கள். ஒருவர் நினைப்பதை ஒளிவுமறைவு இன்றி பேசி விடுவார்கள்.

ஜூலை

ஜூலை மாதத்தில் பிறந்த பெண்கள் நேர்மை, அறிவு, அழகு கொண்டவர்கள். இவர்கள் தனது வாழ்வில் மோதல்கள் ஏற்படாமல் வாழ விரும்புவார்கள்.

ஆகஸ்ட்

ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த பெண்கள் தனித்துவம் மற்றும் தன்னம்பிக்கை அதிகமாக உடையவர்கள். மேலும் இவர்கள் தைரியம் மற்றும் நகைச்சுவை உணர்வுகள் அதிகமாக கொண்டிருப்பார்கள்.

செப்டம்பர்

செப்டம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் அன்பு, கட்டுப்பாடு, அழகு ஆகிய அனைத்தும் கொண்டவர்கள். இவர்கள் யாரையும் அவ்வளவு எளிதில் மன்னித்துவிட மாட்டார்கள். மேலும் இவர்கள் ஒருவருடன் பழகினால் அவருடன் நீண்ட நாள் உறவில் இணைந்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

அக்டோபர்

அக்டோபர் மாதத்தில் பிறந்த பெண்கள் உணர்ச்சிவசப்பட கூடிய பெண்களாக இருப்பார்கள். அனைவரிடமும் வெளிப்படையாக பேச மாட்டார்கள். தங்கள் மீது பொறாமை கொள்ளும் நபர்களையும் வெறுக்க மாட்டார்கள்.

நவம்பர்

நவம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் மற்றவர்களை விட ஒருப்படி முன்னே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மற்றவர்கள் பொய் கூறுவதை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள்.

டிசம்பர்

டிசம்பர் மாதத்தில் பிறந்த பெண்களிடம் பொறுமை இருக்காது. ஆனால் இவர்கள் லக்கியானவர்கள். ஏனெனில் இவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துக் கொண்டு வெற்றி பெற்று விடுவார்கள்.