சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரியின் மகன் ரமேஷ், திரையுலகில் பெரிதாக சோபிக்கவில்லை. அதேநேரம் அவரது சகோதரர் ஜீவாவுக்கு கணிசமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அதிலும் அவர் நடித்த ‘கோ’ திரைப்படம் வேற லெவல் என்றே சொல்லலாம்.

ஜீவா அளவுக்கு அவரது சகோதரர் ரமேஷ் பீக்கில் இல்லை என்றாலும், அவர் நடித்த ஜித்தன் திரைப்படம் இன்றளவும் ரசிகர்களின் பேவரட் படமாகத்தான் இருக்கிறது. ஜித்தன் ரமேஷ்க்கு ஜோடியாக இந்தப்படத்தில் பூஜா நடித்து இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்போது போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார் ஜித்தன் ரமேஷ். இதன் மூலம் தனக்கு சினிமாவில் ரீ எண்ட்ரி கிடைக்கும் எனவும் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருக்கும் ஹவுஸ்மேட் ஒவ்வொருவரும் தங்கள் கடந்த கால வாழ்க்கையை பற்றி பேசிவருகின்றனர். அதில், ஜித்தன் ரமேஷ் பேசும்போது, ‘இன்னிக்குத்தான் நான் பெரிய புரொடீயுசருக்கு பிள்ளை. ஆனால் பிறக்கும்போதே பான் வித் சில்வர் ஸ்பூன்லாம் இல்ல. கூட்டுக்குடும்பத்தில் பிறந்தேன். படிப்படியாகத்தான் இந்த நிலைக்கு வந்தோம். நான் நடித்த முதல் படமான ஜித்தன் செமயா ஓடுச்சு. அதனாலேயே ஜித்தன் ரமேஷ்ன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க.

ஒருகட்டத்தில் ஜித்தனுக்குப் பின்னாடி நான் நடிச்ச எந்த படமும் ஓடல. அதனால ஜீவா அண்ணன், ஆர்.பி.சவுத்ரியின் மகன்னு அடையாளம் சொல்ல ஆரம்பிச்சாங்க. படத்துல நடிச்சுட்டே இருக்காட்டா போட்ட சேரைக் கூட எடுத்து இன்னொருத்தருக்கு கொடுத்துடுவாங்க. என வேதனையோடு பேசினார். இந்நிலையில் ஜித்தன் ரமேஷின் மனைவி, இருகுழந்தைகள் சகிதம் அவர் குடும்பத்தோடு இருக்கும் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் ஜித்தன் ரமேஷின் மனைவி அழகாக இருப்பதாகவும், குழந்தைகள் சகிதம் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துவருகின்றனர்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2: