கொ ரோ னா வைரஸ் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என மறைந்த பிரபல பாபா வாங்கா என்ற பெண் கணித்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

9/11 தாக்குதல் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் சரிவு, தாய்லாந்து சுனாமி போன்ற உலகை அதிர வைத்த சம்பவங்கள் பற்றி சரியாக கணித்தவார் பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்கா.

மாசிடோனியாவில் உள்ள தனது குடும்பத்தின் பண்ணைக்கு அருகில் ஏற்பட்ட தூசி புயலால் பாபா வாங்கா கண் பார்வை இழந்தார்.

பார்வை இழப்பு அவருக்கு ஒரு வகையான ‘இரண்டாவது பார்வை’ கொடுத்தது, அது எதிர்கால நிகழ்வுகளை வினோதமான துல்லியத்துடன் கணிக்க உதவியது என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

1996-ல் இறந்த பாபா வாங்கா, அவரது இறுதி நாட்கள் பல விஷயங்களை கணித்துள்ளார். கணித்ததை அவர் எழுதி வைத்ததில்லை, அவர் கூறியது அனைத்தும் குறித்து வைக்கப்பட்டுள்ளன என ரசிகர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பயங்கரமான தலைவிதியை பாபா வாங்கா முன்கூட்டியே கணித்துள்ளார் என அவர் ரசிகர்கள் கூறியுள்ளனர்.

2020-ல் அமெரிக்க ஜனாதிபதி மர்ம நோயால் பாதிக்கப்படுவார் என்று பாபா வாங்கா முன்கூட்டியே கணித்ததாக கூறப்படுகிறது, இந்த நோயின் பாதிப்பால் ஜனாதிபதி காது கேளாமல் மற்றும் மூளைக் கட்டியுடன் முடங்கிப்போவார் என பாபா வாங்கா கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

2023 ஆம் ஆண்டில் பூமியின் சுற்றுப்பாதையில் மாற்றம் ஏற்பட்டும், 2023 ஆம் ஆண்டில், அமெரிக்காவிற்கும் முஸ்லீம் கட்டுப்பாட்டில் உள்ள இத்தாலிக்கும் இடையில் 2066 ஆம் ஆண்டில் காலநிலை ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து போர் நடக்கும் மற்றும் 2304-ல் காலத்தை கடந்த பயணிக்கும் முறை கண்டுபிடிக்கப்படும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார்.

5079 ஆண்டு இந்த பிரபஞ்சத்தின் முடிவைக் குறிக்கும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்.