மகன் செய்த மகத்தான செயல்! புகைப்படத்துடன் வெளியிட்டு தந்தையாக உருகிய அருண் விஜய்

663

நடிகர் அருண் விஜய்க்கு கடந்த பிஃப்ரவரி மாதம் மாஃபியா படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் வந்த இப்படம் தொடர்ந்து இரண்டாம் பாகமாக எடுக்கப்படவுள்ளது.

வா டீல் படம் அடுத்ததாக அவருக்கு வெளியாகவுள்ளது. மேலும் அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத் ஆகிய படங்கள் இருக்கின்றன.

தற்போது நிலவி வரும் கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் அவரும் வீட்டில் இருக்கிறார். சினிமா பிரபலங்கள் பலரும் வேலை இழந்துள்ள சினிமா ஊழியர்களுக்கு கொரோனா நிவாரண நிதிஉதவி அளித்தனர்.

அவரின் மகன் அர்னவ் அருண் விஜய்யிடம் நாம் பசியாக இருக்கும் அம்மாவுக்கு உணவிட வேண்டும், ஏனெனின் அவருக்கு குட்டிகள் இருக்கின்றன என கூறி தெருநாய்களுக்கு சாப்பாடு போட்டாராம்.

ஒரு தந்தையாக மகன் செய்த இந்த நல்ல செயலை பாராட்டி பெருமிதம் அடைந்துள்ளார்.