முடி சார்ந்த பிரச்சினைகளில் முதல் இடத்தில் இருப்பது முடி உதிர்ந்து வழுக்கையாக மாறும் தொல்லையே.

இதனை சரி செய்ய கடல் களைகளே போதும். இதில் உள்ள ரசியங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கடல் களைகள்

கடல் களைகள் “களைகள்” என்ற வார்த்தையை கேட்டவுடனேயே உங்கள் நினைவிற்கு வருவது வயலில் உள்ள களைகள் தானே..’ பொதுவாக இதனை தேவையற்றவையாகவே நாம் பார்ப்போம். இதே போன்றுதான் கடலிலும் களைகள் அதிகம் காணப்படும்.

சிறிய தாவர உயிரினத்தை சார்ந்தவை இவை. இதில் பல மருத்துவ ரகசியுங்கள் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகிறது. கடற்பாசியை போன்றே இது வளர கூடிய தன்மை உடையது.

தமிழர்களின் பாரம்பரிய முறை

பல காலங்களாகவே கடற்களைகளை நாம் உண்ணும் உணவில், மருத்துவ பயன்பாட்டில், உடல் சார்ந்த சில கோளாறுகளை சரி செய்ய பயன்படுத்தி வருகின்றனர்.

alginate, carrageenan, agar போன்றவையே கடல் களையாக இன்று உபயோகிக்கின்றனர்.

இதில் ஒமேகா-3, ஒமேகா-6 போன்ற முக்கிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. அத்துடன் முடியின் வளர்ச்சியை மேம்படுத்த வைட்டமின் எ,பி,சி,ஈ ஆகியவையும், மெலனின் நிறமியை சுரக்க வைக்கும் பண்புகளையும் கொண்டது.

மேலும் இவற்றில் உள்ள ஐயோடின், இரும்பு சத்து, ஜின்க், காப்பர் போன்றவை உடலுக்கு உறுதியை தரும்.

வழுக்கையில் முடி வளர என்ன செய்ய வேண்டும்?

சிறிதளவு கடல் களைகளை எடுத்து வெயிலில் உலர்த்தி பொடி செய்யவும்.

பிறகு அதனுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து தலையில் 20 நிமிடம் தேய்த்து, மசாஜ் செய்யவும்.

இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்தாலே சொட்டை இருந்த இடத்தில் முடிகள் வளர செய்யும். மேலும் முடி உதிர்வை கட்டுப்படுத்தி அடர்த்தியாக முடி வளர செய்யும்.