வீட்டிலேயே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சில செடிகளை வளர்க்கலாம். அதன் வாசனையை தினமும் நுகர்ந்தாலே புத்துணர்வு ஆட்கொள்ளும்.

அப்படி இந்த செடிகளை வீட்டில் போதுமான இடம் இருப்பின் வளர்த்து வாருங்கள். தினமும் ஒன்று இரண்டு என பறித்து மூலிகை பானமாக குடிக்கலாம் அல்லது வெறுமனே கிள்ளி சாப்பிடலாம். அவை என்னென்ன செடிகள் என்று பார்க்கலாம்.

துளசி

துளசி செடி இந்திய இல்லங்களில் இன்றளவும் காணக் கூடும். இதை தினம் ஒரு இலை என உண்டு வந்தால் கூட போதும். இதன் சில இலைகளை கிள்ளி தண்ணீரில் கொதிக்க வைத்து தேன் கலந்து தினமும் பருகலாம்.

புதினா

புதினாவில் காம்புகளை நட்டு வைத்து பராமரித்தாலே நன்கு வளரும். இது நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமன்றி வயிற்றுக் கோளாறுகளையும் சரி செய்ய உதவும். உடலுக்கு குளிர்ச்சியானது.

இஞ்சி

பாரம்பரிய மருத்துவத்தில் இஞ்சி இன்றியமையாதது. தற்போதைய கொரோனா தொற்றை எதிர்கொள்ளவும் இஞ்சி அதிசிறந்த மருந்தாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கொத்தமல்லி

தனியா விதைகளை மண்ணில் நட்டு வைத்தாலே நன்கு வளரும். இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் மட்டுமன்றி புற்றுநோயை தடுக்கும், சருமத்தை பராமரிக்கும், இரத்தத்தில் சர்க்கரை அளவை சரி செய்யும். இப்படி பல நன்மைகளை கொண்டுள்ளது.

அதிமதுரம்

அதிமதுரம் எண்ணற்ற மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. கொழுப்பை கரைப்பது, இதயம் பாதிப்புகள் என பலவற்றிற்கும் அதிமதுரம் உதவும்.