Home » பிக்பாஸ் விசித்ராவின் மகன் கல்லூரிக்கு கூட போக முடியவில்லை.., வேதனையில் கணவர்

பிக்பாஸ் விசித்ராவின் மகன் கல்லூரிக்கு கூட போக முடியவில்லை.., வேதனையில் கணவர்

by ftcnc
0 comment 1.8K views

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விசித்ரா தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து பேசியதால், அவரது மகன் மனமுடைந்து இருப்பதாக கணவர் வேதனையுடன் கூறியுள்ளார்.

பாலியல் விவகாரம்

தனியார் சேனல் ஒன்றில் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா போட்டியாளராக உள்ளார். அந்த நிகழ்ச்சியில் பூகம்பம் டாஸ்க் ஒன்று வைக்கப்பட்டது. அந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் தங்களது வாழ்க்கையில் நடந்த நிகழ்வை பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அப்போது பேசிய விசித்ரா, தெலுங்கு மொழியில் நடித்த படத்தில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பகிர்ந்து கொண்டார். இந்த விவகாரம், சமூக வலைதளங்களில் சர்ச்சையையும், பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

கணவரின் பேட்டி

இந்நிலையில், விசித்ராவின் கணவர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், “இந்த சம்பவம் குறித்து எப்போது பேசினாலும் விசித்ரா கண்கலங்குவார். இப்போது பிக்பாஸில் இதை பற்றி எப்படி பேசினார் என்பது தெரியவில்லை.

விசித்ராவின் பாதுகாப்பு கருதி அந்த நடிகரின் பெயரை வெளியில் சொல்லவில்லை. பிக்பாஸ் பார்த்து இதை பற்றி அறிந்ததும், எனது மூத்த மகன் கல்லூரிக்கு கூட போக முடியாமல் மனமுடைந்து இருக்கிறான்” என்றார்.

You may also like

Leave a Comment