தமிழகத்தில் திருமண நாளின் போது கணவனுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மனைவி தூ க் கி ட் டு த ற் கொ லை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோ க த் தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல், கங்கா நகர், மூன்றாவது தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார்.

சுரேஷ் தனியார் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் இந்த தம்பதிக்க்கு நேற்று முன் தினத்தோடு, திருமணம் முடிந்த ஒராண்டுகள் ஆகிவிட்டதால், திருமண நாளை கொண்டாடுவதற்கு சுரேஷ் தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டாடலாம் என்று கணவரான சுரேஷிடம் கூறியுள்ளார்.

அதற்கு சந்தியா திருமணமாகி ஓராண்டு முடிவடைந்த நிலையில் இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்றும், தற்போது போதிய வருமானம் இல்லாததால் தேவை இல்லாமல் வீண் செலவு செய்து திருமண நாளை கொண்டாட வேண்டாம் என கூறியுள்ளார்.

இதன் காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் சுரேஷ் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார்.

அதன் பின் மாலை நேரத்தில் மனைவியின் போனிற்கு சுரேஷ் தொடர்பு கொண்ட போது, சந்தியா வெகு நேரமாக செல்போனை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த சுரேஷ், தன்னுடைய தாயிடம் உடனடியாக வீட்டிற்கு சென்று பார்க்கும் படி கூறியுள்ளார்.

சுரேஷின் தாய் சென்று பார்த்தபோது சந்தியா வீட்டில் தூ க் கு ப் போ ட் டு தொ ங் கி ய நி லை யி ல் இருப்பதை கண்டு அ தி ர் ச் சி அ டை ந் தா ர்.

இதைத் தொடர்ந்து, அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று சந்தியாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சந்தியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அருகில் இருக்கும் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் சந்தியாவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.