நம்ம மீனாட்சி ரக்ஷிதா இதுக்கு அடிமையானவங்களாம்!… இது இல்லாம இருக்க வேமுடியாதாம்

1333

சரவணன் மீனாட்சி சீரியல் ரக்ஷிதா அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது, அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் நங்கூரமிட்டு அமர்ந்து கொண்டுள்ளார்.

பெங்களூரு பெண்ணான ரக்ஷிதா மொடலிங் செய்து கொண்டிருந்த போது மேக மந்திரன் என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தொடர்ந்து கன்னட, தெலுங்கு சீரியல்களில் கலக்கி கொண்டிருந்தவர், 2011ம் ஆண்டு பிரிவோம் சந்திப்போம் தொடரின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.

முதல் சீரியலிலேயே கருப்பு மேக்கப் அணிந்து கொண்டு நடித்த தில்லான நடிகை என்றபெயரை பெற்றார்.

அதே சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து கரம்பிடித்தார், அடுத்ததாக பல சீசன்களில் சரவணன் மாறினாலும் மீனாட்சியாக நடித்து அசத்தினார்.

இதனால் பல விமர்சனங்களை சந்தித்த போதும் தளராமல் நடித்ததாக அவரே பல மேடைகளில் கூறியிருக்கிறார்.

இப்படி படிப்படியாக முன்னேறிய ரக்ஷிதா தற்போது பிரபல தொலைக்காட்சியின் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் நடுவராகவும் இடம்பெற்றிருக்கிறார்.

அத்துடன் நாச்சியார்புரத்தில் தன் கணவருடன் மீண்டும் சேர்ந்து நடிப்பதால் பயங்கர குஷியாக இருக்கிறாராம்.

எப்போதாவது ஓய்வு கிடைத்தால் அடிக்கடி கணவனுடன் சேர்ந்து ஊர் சுற்றும் ரக்ஷிதா டிஷ்யூ பேப்பருக்கு அடிமையானவராம்.

டிஷ்யூ பேப்பர் இல்லாமல் இருக்கவே முடியாது என கூறும் ரக்ஷிதாவுக்கு, வித்தியாசமான பிஸ்கெட்டுகளை ருசிப்பதில் அலாதி பிரியமாம்.

அதுமட்டுமா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசி அசத்துவதிலும் வல்லவராம்.