படு மாடர்ன் உடையில் பிக் பாஸ் ஜூலி! தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்… மானபங்கம் செய்த நெட்டிசன்கள்

12814

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விதவிதமாக கோஷம் போட்டு மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். ஜூலி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது அதை ரசிகர்கள் பெருமையாக பார்த்தார்கள். ஆனால் இடையில் காயத்ரியுடன் சேர்ந்து கொண்டு ஜூலி செய்த சில காரியங்கள் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது. இதனால் தமிழ் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்கொண்டார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகும் ஜூலியை சோசியல் மீடியாவில் வறுத்தெடுப்பதை நெட்டிசன்கள் கைவிடவில்லை. ஜூலி என்ன செய்தாலும், அதை மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இடையில் பட வாய்ப்புகள், கடை திறப்பு விழா, கல்லூரி நிகழ்ச்சிகள் என பிசியாக வலம் வந்தார்.

ட்விட்டரில் படு ஆக்டிவாக வலம் வந்த ஜூலி தனது விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்து வந்தார். ஆனால் ஜூலி என்ன செய்தாலும் நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தான் ஜூலி தனது அழகிய புகைப்படங்களை ட்விட்டருக்கு பதில் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வருகிறார்.

மேக்கப் இல்லாமல் ஜூலி மாடர்ன் உடையில் எடுத்திருக்கும் அந்த புகைப்படங்களை பார்த்தவர்கள் கலாய்க்கவில்லை, திட்டவில்லை, மாறாக பாராட்டி வருகின்றனர்.

தன்னை புகழ்ந்து தள்ளும் இன்ஸ்டாவாசிகளுக்காக ஜூலி ரக ரகமாக போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். மேக்கப் இல்லாத முகத்துடன் குட்டை உடையில் இருக்கும் கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

தினுசு தினுசாக போஸ் கொடுத்து அசத்தும் ஜூலியின் புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் பாராட்டும் ஓவராக கிடைப்பதால் ட்விட்டரை ஓரங்கட்டி விட்டு, இன்ஸ்டாகிராமிலேயே குடிபுகுந்து விடும் முடிவில் உள்ளாராம் ஜூலி.