உடும்பு பிடியாக உள்ள ஊழியர்கள், குடும்பத்துடன் வர உள்ளார்கள், அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம்..? இப்படியே போனால் பொங்கலுக்கு..?

0
60

அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது

எனவே ஓய்வூதிய நிலுவை தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

இன்று போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினால் துறை ரீதியான நடவடிக்கை இல்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம்  கூறியுள்ளார்

பணிக்கு திரும்பாவிட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்..

ஆனால் ஊழியர்களோ, இன்று குடும்பத்துடன் போராட உள்ளதாக கூறியுள்ளார்

போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் ஒரு சமூகப் பிரச்சனை.
எளிய மக்களின் போக்குவரத்து நலன் கருதியே போக்குவரத்துத் துறையை இந்தியாவிலுள்ள எல்லா மாநில அரசுகளும் நடத்தி வருகின்றன, அதே போல தொடர்வண்டி சேவையை மத்திய அரசு நடத்துகிறது.

அரசு போக்குவரத்தை நடத்துவதால் கிராமப்புறப் பகுதிகளுக்கு போக்குவரத்து வசதி கிடைக்கிறது,

ஏழை மாணவர்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கப்படுகிறது, இவ்வாறு அரசு போக்குவரத்து சமூகத்தின் பொது நலனோடு பின்னிப் பிணைந்தது.

போக்குவரத்து தொழிலாளர்கள் தமது பிடி பணத்தை கொடுக்க வேண்டி இவ்வளவு கடுமையான போராட்டம் நடத்துவது மிகவும் துயரமானது.

திட்டமிட்டு அரசு போக்குவரத்தைச் சீர்குலைத்து தனியாருக்கு கதவைத் திறந்துவிட நடக்கிற வெளிப்படையான சதித்திட்டமா இது..? என்றே தோன்றுகிறது..

வருமானம் வரும் அனைத்துத் துறைகளிலும் நுழைய தனியார் முதலாளிகள் துடியாய்த் துடிக்கிறார்கள்.

பெரிய வருவாய் வரக்கூடிய மக்களின் அத்யாவசியத் தேவையான போக்குவரத்தை தனியாருக்கு தாரை வார்க்கவே அரசு போக்குவரத்தை திவலாக்குகிறதா..? என்ற சந்தேகம் அடிப்படையில் அனைவர்க்கும் எழுவது இயல்பே

NO COMMENTS

LEAVE A REPLY