ஆத்தாடி வெற்றிலையில் இவ்வளவு நன்மைகளா? இது தெரியாம போச்சு!

0
97

இந்துமத கலாச்சார பழக்க வழக்கங்களில் அனைத்து காரியங்களிலும் முன்னிலை வகிக்கும் இன்றியமையாத ஒரு மங்கள பொருள்தான் வெற்றிலை. நம்முடைய பழக்க வழக்கங்களில் வெற்றிலையின் பயன்பாடு தொன்று தொட்டே இருக்கிறது.

வெற்றிலையில் ஐந்து தெய்வங்கள் உறைந்துள்ளனர். வெற்றிலையின் நுனியில் மூதேவியும், காம்பில் மகாலட்சுமியும், நரம்பில் பிரம்மாவும், முன் பகுதியில் சிவனும், பின் பகுதியில் சக்தியும் என ஐம்பெரும் தெய்வங்கள் உறைந்துள்ளனர். எனவே வெற்றிலை போடும்போது நுனியையும், காம்பையும், நரம்பையும் நீக்கி விட்டு சுண்ணாம்பு தடவி போடுதல் நன்று.தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. நாக இலை என்று அழைக்கப்படும் வெற்றிலையானது, பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டது.இதன் இயல்புகள் சில வருமாறு.

நாம் உண்ணும் உணவு முறையாக ஜீரணிக்கப்பட்டு சத்துக்கள் உடலில் முழுமையாய் சேருவதற்கும், உடலின் அனைத்து எலும்புகளுக்கு தேவையான சுண்ணாம்பு [கல்சியம்] சத்தை சமன் செய்யவும் வெற்றிலை, பாக்கு போடுதல் மிகவும் தேவையாகும். 40 வயதிற்கு மேல் மதிய உணவிற்குப் பின் வெற்றிலை, பாக்கு சேர்தது உண்ணுதல் மிகவும் அவசியம் ஆகும். ஏனென்றால் இந்த வயதிற்குப் பிறகு ஜீரண சக்திகள் குறைய தொடங்கும்.

வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கல்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் விட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44% ஆகும் வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.

வெற்றிலை, பாக்கு போடும்போது முதலில் பாக்கை மட்டும் போடக் கூடாது. இது தவறாகும். பாக்கை மட்டும் வாயிலிட்டு மென்று உமிழ்நீரை விழுங்கும் போது இதன் துவர்ப்பினால் கழுத்துக் குழல் சுருங்கி நெஞ்சு அடைக்கும். மயக்கம், மூர்ச்சை அடைய ஏதுவாகும். மேலும் சொந்த பந்த உறவினர்கள் பிரிந்து விடுவர் என சாஸ்திர விதிகள் கூறுகிறது.

வெற்றிலை நம்முடைய ஜீரண சக்தியை அதிகரிக்கும். அதனால்தான் முன்பெல்லாம் உணவு அருந்தியப் பிறகு வெற்றிலையை மென்று சாப்பிடுவார்கள். மேலும் 40 வயதிற்கு மேல் ஜீரணசக்தி குறைவதால் வெற்றிலையை உண்ணுவது ஜீரணத்திற்கு உதவும். வெற்றிலை சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழுங்கினால் அஜீரணக் கோளாறுகளைப் போக்கும்.

வெற்றிலையில் இருக்கும் கல்சியம் மற்றும் இரும்புச்சத்தை நம் உடல் இயற்கையாக ஏற்றுக் கொள்ளும். நம் எலும்புகளுக்கு தேவையான கல்சியம் சத்தை வெற்றிலை கொடுக்கிறது. வெற்றிலையானது நீர்ச்சத்து, புரதச் சத்து, கொழுப்புச் சத்து நிறைந்துள்ளது. இருமலைக் குறைக்க வெற்றிலை சாறுடன் கோரோசன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் இருந்தால் வெற்றிலையில் கடுகு எண்ணையை தடவி மிதமாக சூடேற்றி, மார்பில் சிறிது நேரம் வைத்து எடுக்க வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்ய மூச்சுத்திணறல் நிற்கும். நரம்புகள் பலப்பட, வெற்றிலைச்சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து தினமும் குடிக்க வேண்டும். வெற்றிலைச் சாற்றுடன் சிறிது கற்பூரத்தைச் சேர்த்து, நெற்றியில் தடவ தலை வலி நீங்கும். வெற்றிலைச் சாரை மூக்கில் விட்டால் சளிப் பிரச்சனையை தீர்க்கலாம். வெற்றிலை வேரை மென்று வர குரல் வளம் பெருகும்.

பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்த வெற்றிலையை, நம்முடைய அன்றாட வழக்கத்தில் ஒரு உணவு வகையாகவும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

NO COMMENTS

LEAVE A REPLY