இலங்கை கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விக்கு இதுவே காரணம்? பிரபல ஜோதிடரின் கணிப்பு

0
207

இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக தோல்வியடைந்து வருவதற்கு காரணம் என்ன என்பது குறித்து பிரபல பெண் ஜோதிடரான கங்கா சுதர்சனி தகவல் வெளியிட்டுள்ளார்.

வெளிநாடு ஒன்றினால் இலங்கைக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே இலங்கை கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் 2011ஆம் ஆண்டு முதல் ஆருடங்களை வெளியிட்ட போதிலும், எந்தவொரு அதிகாரியும் இதனை கண்டுகொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் தம்மிடம் இதற்கு உதவி கோரினால், உதவி செய்யத் தயார் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது இலங்கை கிரிக்கட் அணிக்கு நல்ல காலம் மலர்ந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY