மூன்று பரோட்டா சாப்பிட்டால் ஒரு லட்ச ரூபாய் பரிசு……சலுகைகளை அள்ளி வீசும் ஹோட்டல்!

0
177

இந்தியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் 3 பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசும் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு இலவசமாக பரோட்டாவும் வழங்கப்படுகிறது.

புது டெல்லியில்- ரோடாக் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது தான் தபாஸ்யா பரோட்டா கடை. பரோட்டாவுக்கு பெயர் போன இந்த ஹோட்டலில் ரூ.180லிருந்து ரூ.400 வரை பரோட்டா கிடைக்கிறது.

இங்கு தயாரிக்கப்படும் ரூ.400 பரோட்டா ஒன்று 2 கிலோ எடை கொண்டதாகவுள்ளது. இது போன்ற 3 பரோட்டாவை 50 நிமிடங்களுக்குள் சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு இலவசமாக பரோட்டா தரப்படுகிறது. ஆனால் போட்டியில் 3 பரோட்டாக்களை சாப்பிட முடியாமல் போனால் சாப்பிட்ட வரையிலான பணத்தை வாடிக்கையாளர் கொடுத்துவிட வேண்டும்.

இந்த போட்டியில் பலர் தோற்றுள்ள நிலையில் மகராஜ் சிங் மற்றும் அஷ்வனி ஆகிய இரண்டு பேர் மட்டுமே இதில் வெற்றி பெற்று ஒரு லட்ச ரூபாயை தட்டி சென்றுள்ளனர்.

இதில் ஒருவர் 50 நிமிடங்களில் நான்கு பரோட்டாக்களை சாப்பிட்டு வியக்க வைத்துள்ளார். இத்தகைய பரிசு சலுகை காரணமாக கடையில் எப்போதும் நல்ல கூட்டம் உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY