யாழில் அடுத்தடுத்து அதிரடிக் கைதுகள்!! கதி கலங்கும் ரவுடிகள்!!

0
886

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் வைத்து பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் இளைஞர்கள் இருவர் அடுத்தடுத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஜீவராஜ் என்பவர் இன்று காலை 9.30 அளவில் கொக்குவில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில்,

10 மணியளவில் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 20 வயதான மது என்ற இளைஞனும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவிலுக்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தின் போது பொலிஸார் இருவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY