வேறொரு நபருடன் தாய்க்கு கள்ளத்தொடர்பு: ஆத்திரத்தில் மகன் செய்த செயல்

0
257

தாய்க்கு வேறு நபருடன் தொடர்பு உள்ளதாக சந்தேகப்பட்ட மகன் அவரின் தலைமுடியை வெட்டி பின்னர் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் தம்தரி மாவட்டத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

துர்கா பாய் (45) என்ற விதவை பெண் தனது மகன் ராஜ்னேஷ் சிங் (25) என்பவருடன் வசித்து வந்தார்.

ராஜ்னேசுக்கு திருமணமாகி மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில், துர்கா அதே ஊரை சேர்ந்த ஒரு நபருடன் தொடர்பில் உள்ளதாக ராஜ்னேசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நபருடனான தொடர்ப்பை விட்டு விடும்படி தாயிடம் கூறியும் அவர் கேட்கவில்லை. துர்காவையும், அவருடன் பழகிய நபரையும் பல தடவை ஒன்றாக ராஜ்னேஷ் பார்த்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் மீண்டும் பார்த்துள்ளார்.

இதையடுத்து தாய் மீது ஆத்திரம் ஏற்பட அவரின் தலைமுடியை வெட்டிய ராஜ்னேஷ் பின்னர் அடித்து கொலை செய்துள்ளார்.

சடலத்தை தனது வீட்டு வாசலிலேயே போட்ட ராஜ்னேஷ் நேராக காவல் நிலையத்துக்கு சென்று அனைத்து விடயங்களையும் கூறி சரணடைந்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் துர்காவின் சடலத்தை கைப்பற்றி விட்டு ராஜ்னேசிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

loading...

NO COMMENTS

LEAVE A REPLY