இனி க.பொ.த சாதாரண தரம் படிக்கப் போகும் மாணவர்களின் நெஞ்சில் பால் வார்த்த கல்வி அமைச்சர்!!

0
221

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் இனிவரும் காலங்களில் நடைமுறையிலுள்ள ஒன்பது பாடங்களை பல மாற்றங்களுடன் குறைத்து, தகவல் தொழில்நுட்பத்தினை கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்தெரிவித்துள்ளார்.பின்லாந்து நாட்டில் உலகின் வெற்றிகரமான கல்வி முறை காணப்படுவதாகவும், நடைமுறை மற்றும் தொழிற்துறை கல்வியே அங்குநடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.பின்லாந்து நாட்டைப் போல, குறித்த நடைமுறைக்கு முன்னுரிமை கொடுத்து மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ள கல்வித்திட்டம் மூலம், நாட்டின் மாணவர்களதுஎதிர்காலத்தைச் சிறந்த முறையில் வலுப்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இப்போதாவது இலங்கை அரசாங்கத்திற்கு ஞானம் பிறந்திருக்கின்றமை அதிசயமே…. நாட்டின் கல்வித் துறையில் இன்னும், இன்னும் புதிய மாற்றங்கள் வரவேண்டும்…. அப்போது தான், நவீன யுகத்திற்கு ஏற்ப நமது இளைய சமுதாயம் உலக நாடுகளுடன் போட்டி போட முடியும்… நாமும் முன்னேற முடியும்….. கல்வி அமைச்சரின் அறிவிப்பிற்கு ஒரு சபாஷ்…

loading...

NO COMMENTS

LEAVE A REPLY