கட்டாய உறவால் 70 வயது முதியவர் மரணம்: கள்ளக்காதலியின் வெறிச்செயல்

0
1086

70 வயது முதியவரை கட்டாயப்படுத்தி கள்ளக்காதலி உறவு கொண்ட நிலையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறையை சேர்ந்தவர் சாமிநாதன் (70) இவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார்.

கடந்த 30-ஆம் திகதி காணாமல் போன சாமிநாதன் அடுத்தநாள் அங்குள்ள ஒரு காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

பெருந்துறை பேருந்து நிலையத்தில் சாமிநாதனின் ஸ்கூட்டர் நின்றிருந்தது. சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வந்த நிலையில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு பொலிசிடம் சரணடைந்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜயமங்கலத்தை சேர்ந்தவர் பாப்பாத்தி (57) தனியாக வசித்து வரும் இவரும் சாமிநாதனும் பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 30-ஆம் திகதி மழையில் நனைந்தபடி நடுக்கத்துடன் பாப்பாத்தி வீட்டுக்கு சாமிநாதன் வர, தன்னுடன் உல்லாசமாக இருக்க அவரை பாப்பாத்தி வற்புறுத்தியுள்ளார்.

சாமிநாதன் மறுத்தும் அவருடன் பாப்பாத்தி வலுக்கட்டாயமாக உறவு கொண்டுள்ளார். அப்போது சாமிநாதனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்துள்ளது.

இதையடுத்து பயந்துபோன பாப்பாத்தி இது குறித்து தன் மகன் கிருஷ்ணனுக்கும் (34), சம்பந்தி ஈஸ்வரிக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்த நிலையில் மூவரும் சேர்ந்து சாமிநாதனின் சடலத்தை காரில் ஏற்றி கொண்டு காட்டுப்பகுதியில் போட்டுவிட்டு, அவரின் ஸ்கூட்டரை பேருந்து நிலையத்தில் விட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து மூவரையும் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

loading...

NO COMMENTS

LEAVE A REPLY