ஆந்திர மாநிலத்தில் புதிதாக திருமணம் செய்த சைலஜா எனும் பெண்ணை அவரது கணவர் ராஜேஷ், முதலிரவு அறையில் வைத்து பிளேடால் தாக்கியதில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

முதலிரவு அன்று தனக்கு ஆண்மை குறைபாடு உள்ள விஷயத்தை சைலஜாவிடம் ராஜேஷ் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த சைலஜா தனது பெற்றோரிடம் இதைக் கூறி அழுதுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ், சைலஜாவை தாக்கியுள்ளார், இந்நிலையில் திருப்பதி சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சைலஜாவின் முழு மருத்துவ செலவையும் ஏற்பதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

சைலஜா முழுமையாக குணமடையும் வரை அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

இதனிடையே, நீதிமன்ற அனுமதியுடன் ராஜேஷுக்கு திருப்பதியில் உள்ள தேவஸ்தான மருத்துவமனையில் நேற்று ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர், அவர் மீண்டும் சித்தூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

loading...

NO COMMENTS

LEAVE A REPLY