கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவன்: தூங்கிக் கொண்டிருந்த போது அவரது மனைவி கொடுத்த அதிர்ச்சி தண்டனை

0
342

தொடர்புடைய படம்தமிழகத்தில் கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவனுக்கு பாடம் புகட்ட, அவரது மனைவி மர்ம உறுப்பில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். ஆட்டோ டிரைவரான இவருக்கு சசிகலா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் பரமேஸ்வரனுக்கு விராட்டிபாத்தில் உள்ள பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளைடைவில் கள்ளத் தொடர்பாக மாறியுள்ளது.

இதை அறிந்த சசிகலா, தன் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மனைவிக்கு தெரிந்துவிட்டதால், அவர் வீட்டுக்கு வருவதையே நிறுத்தி விட்டு விராட்டிபத்திலேயே தங்கியுள்ளார்.

அதன் பின் இது குறித்து சசிகலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அங்கு பொலிசார் கண்டித்து அனுப்பியும், இவர் தன்னை மாற்றிக் கொள்வதாக இல்லை.

இதனால் பெரிதும் ஆத்திரமடைந்த சசிகலா, இவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று இனி மேல் இதைப் பற்றி எதுவும் பேசமாட்டேன், சண்டை போடமாட்டேன் என்று பரமேஸ்வரனை போனில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.

அதன் பின் மனைவியின் பேச்சை நம்பி வீட்டிற்கு வந்து தூங்கிக் கொண்டிருந்த போது, கொதிக்கும் எண்ணெய்யை அவரது மர்ம உறுப்பில் ஊற்றியுள்ளார்.

வலி தாங்கமுடியாமல் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனை அனுமதித்துள்ளனர்.

இருப்பினும் இது குறித்து சசிகலா மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

loading...

NO COMMENTS

LEAVE A REPLY