36 ஆண்டு சாதனையை அதே நாளில் முறியடித்தார் தமிழர் : வரலாற்று சாதனை..!!

0
932

36 ஆண்டு சாதனையை அதே நாளில் தமிழர் அஸ்வின் முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

முதல் இன்னிங்சில் இலங்கை 166 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 610 ரன்கள் எடுத்திருந்த போது டிக்லேர் செய்தது.

இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 205 ரன்கள் எடுத்திருந்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்க்ஸ் தோல்வியை தழுவியது.

இந்திய அணியில், அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இந்த போட்டியில் அஸ்வின் 4 விக்கெட்டுகளை எடுத்தன் மூலம் 300 விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். மேலும், குறைந்த போட்டிகளில் 300 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு, ஆஸ்திரேலியாவை சேர்ந்த டி.கே.லில்லீ என்ற வீரர் 56 போட்டிகளில் விளையாடி 300 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். தற்போது அந்த சாதனையை 54 போட்டிகளில் அஸ்வின் முறியடித்துள்ளார்.

மேலும், டி.கே.லில்லீ இதே நாளில் (27 Nov 1981) பாகிஸ்தானுக்கு எதிராக தன்னுடைய 300-வது விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். தற்போது 36 ஆண்டுகள் கழித்து அதே நாளில் அவருடைய சாதனையை அஸ்வின் முறியடித்து வரலாற்று சாதனை புரிந்துள்ளார்.

loading...

NO COMMENTS

LEAVE A REPLY