மகளை பூஜைக்கு அழைத்துச் சென்ற மந்திரவாதி… நேரில் பார்த்த தாய்க்கு கிடைத்த பேரதிர்ச்சி

0
822

மும்பை பவாயில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருபவர் மந்திரவாதி நாகேஷ் பண்டாரி. இவர் தங்கியுள்ள வீட்டின் அருகே உள்ள 17 வயது பெண்ணை தனது வீட்டில் நடக்கும் பூஜையில் கலந்துகொள்ளுமாறு அடிக்கடி அழைத்து செல்வது வழக்கம்.

இதனையடுத்து அந்த பெண்ணின் தாய் தனது மகளின் நடவடிக்கையில் மாற்றத்தை பார்த்துள்ளார். மேலும் சம்பவத்தன்று மந்திரவாதியின் வீட்டிற்கு சென்ற தனது மகளை ரகசியமாக பின் தொடர்ந்து சென்று கண்காணித்தார்.

அப்போது அந்த மந்திராவாதி இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை நேரில் அவதானித்த அந்த பெண்ணின் தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்பு தனது மகளிடம் நடந்த விபரத்தை கேட்ட தாய் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார். மந்திரவாதி பூஜைக்கு அழைத்து வரும் பொழுதெல்லாம் தன்னை பலமுறை கற்பழித்ததாக கூறியுள்ளார்.

இதையடுத்து தனது மகளை அழைத்து சென்ற தாய் மந்திரவாதி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக பொலிசார் அந்த மந்திரவாதி வழக்குபதிவு செய்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY