சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!

0
179

தமிழ் சினிமாவுக்கு 36 வயதினிலே படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஜோதிகா. கதைக்கும் தனக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டரை சமீபகாலமாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் இயக்குநர் பிரம்மாவின் ‘மகளிர் மட்டும்’ படத்தில் நடித்தார். இதற்குப் பிறகு, ஜோதிகா மற்றும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் விரைவில் வெளிவரப் போகும் திரைப்படம் ‘நாச்சியார்’. ஜோதிகா போலீஸ் கேரக்டரில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குற்றவாளியாக நடித்திருக்கிறார். பாலா இயக்கும் படத்தில் ஜோதிகாவும் ஜி.வி.பிரகாஷூம் நடித்திருப்பதாலே ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது. மேலும், படம் பற்றிய போஸ்டரும் வெளியாகி வைரலான நிலையில் தற்போது ‘நாச்சியார்’ படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது. படத்தின் டீசரை நடிகரும் ஜோதிகாவின் கணவருமான சூர்யா இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY