இலங்கையில் ஒரே குடும்பத்தில் நிகழும் அமானுஷ்யம்!… நம்பமுடியாத அதிர்ச்சி

0
602

இலங்கையில் ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நடக்கும் உயிர்பலி மற்றும் 30 முதல் 33 வயதிற்குள் குடுபத்தினர் உயிரிழக்கப்படுவதற்கு காரணம் அமானுஷ்யம் என்று கூறுகின்றனர்.

இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க இடமான தம்புள்ளையிலிலிருந்து சுமார் 47.2 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது மெல்சிரிபுர எனும் பிரதான நகரம், அங்கிருந்து சில கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள நகரமே பள்ளியத்த.

அண்மையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தம்பதியினர் வாகன விபத்தொன்றில் உயிரிழந்தமையினால் அவர்களின் மூன்று குழந்தைகள் அனாதையாகியுள்ளனர்.

இதுகுறித்து மேலும் சில அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரியவந்துள்ளது. இறந்தவர்களின் உறவினர்கள் கூறும் சம்பவங்கள் நிச்சயம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பரம்பரையினரின் வம்சாவளியினரே இவ்வாறு 30 அல்லது 33 வயதிற்குள் உயிரிழக்கின்றனர் இந்த கிராமத்தில் பல வருடங்களுக்கு முன்னர் சகோதரிகள் இருவர் வாழ்ந்து வந்துள்ளனர்.

பல திறமைகளையும் ஆற்றல்களையும் கொண்ட அவர்கள் அனைத்திலும் சாதிக்கும் திறமையும் கொண்டிருந்தனர். அவர்களுக்கு பெற்றோர்கள் திருமணமும் செய்து வைத்துள்ளனர்.

மிகவும் மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த இவர்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் இருந்துள்ளனர்.

சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த சகோரிதரிகள் இருவரும் இனம் கண்டுகொள்ள முடியாத கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர்களை மரணம் தழுவுகையில் ஒருவருக்கு 32 வயதும் பிரிதொரு சகோதரிக்கு 33 வயதிற்கு சில மாதங்களே காணப்பட்டன.

இவர்கள் உயிரிழப்பினை தொடர்ந்து அவர்களின் கணவர்களில் ஒருவர் 32 வயதினையும் பிரிதொருவர் 33 வயதினையும் கடந்த பின்னர் மன நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் மரணிக்கின்றனர்.

அநாதைகளாக்கப்பட்ட குறித்த சகோதரிகள் இருவருரின் பிள்ளைகளையும் உறவினர்கள் வளர்த்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர்.

இந்நிலையில், திருமணம் நடைபெற்ற ஒரு சகோதரியின் புத்திரன் 33 வயதில் விபத்தொன்றினால் மரணத்தை தழுவிக்கொள்ள அவரின் மனைவி 3 பிள்ளைகளுடன் அநாதையாக்கப்படுகின்றார்.

உயிரிழந்தவரின் சகோதரி தனது பிள்ளைகளை பாடசாலையிலிருந்து அழைத்து வருவதற்காக கணவருடன் சென்ற வேளையில், அவர்களும் வாகன விபத்தினால் சம்பவ இடத்திலேயே உயிரிழக்கின்றனர். அவர்களின் மூன்று பிள்ளைகளும் தற்பொழுது உறவினர் அற்ற உயிர்களாக நிர்கதியாக்கப்படுகின்றனர்.

இந்த குடும்பத்தில் 32 மற்றும் 33வயதுடைய கைம்பெண்கள் (விதவைகள்) இருவரே எஞ்சியுள்ளனர். அவர்களும் மனநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என வைத்தியர்களால் சான்றிதழ்ப்படுத்தப்பட்டவர்களாவர்.

எனினும் குறித்த குடும்பத்தில் எஞ்சியிருக்கும் ஏனைய அனைவரும் 30 வயதை கடந்தவுடன் மிகவும் அச்சத்தில் வாழ்ந்து வருவதாகவும், இதனை சீர் செய்ய ஏதேனும் வழி கிடைக்காதா என தேடிக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY