மீரிகம அழகுக் கலை நிலையத்தில் நடந்து என்ன? மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி!!

0
404

மீரிகம காவல்துறை நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள அழகு கலை நிலையமொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதியொருவரின் சடலம் நேற்றுப் பிற்பகல் மீட்கப்பட்டது.

குறித்த யுவதி அழகு கலை பயிற்சிக்காக அந்த நிலையத்திற்கு வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றார்கள்.மீரிகம – கிதலவான பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி அழகு கலை நிலையத்தில் உயிரிழந்து காணப்பட்டமையை அந்த நிலையத்தின் உரிமையாளரான பெண்ணொருவரே முதலில் கண்டுள்ளார்.காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்த போது அந்த நிலையத்தை நடத்தி சென்ற பெண் அங்கு இருக்கவில்லை.

இந்நிலையில் காவல்துறைக்கு தொலைபேசி ஊடாக அழைத்துள்ள குறித்த பெண், பின்னர் வருதாக கூறிய போதும், அவர் குறித்த இடத்திற்கு வரவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த யுவதி, மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணை இடம்பெற்றுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலம் வத்துபிட்டிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருக்கிறார்கள் .

NO COMMENTS

LEAVE A REPLY