தலை பொடுகு நீங்க 7 இயற்கை பொருட்கள் ! சூப்பர் டிப்ஸ்

0
241

பொடுகு பிரச்னைக்கு பாரம்பரிய இந்தியா மற்றும் சீன மருத்துவ முறையில் முட்டை மற்றும் எண்ணெய் பயன்படுத்துகின்றனர். சில குறிப்பிட்ட இடங்களில் தேயிலை மர எண்ணெய் பயனபடுத்தப்படுகிறது. மேலும், வெங்காயத்தை அரைத்து தலையில் தேய்த்து, 15 நிமிஷம் கழித்து சுத்தம் செய்யலாம். பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்த்து, 15 நிமிஷம் கழித்து சுத்தம் செய்கின்றனர். அவ்வப்போது தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம். வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிப்பது அவசியம். பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். தலை பொடுகு நீங்க சில முக்கிய குறிப்புகள் வீடியோவில் !

1. பொடுகு ஒரு பூஞ்சை :

உங்கள் தலையில் உள்ள பொடுகை நினைத்து கவலை கொள்வதற்கு முன் நீங்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பொடுகு உங்கள் உடல்நலனுக்கு தேவையான, ஆரோக்கியமான, சாதாரண ஒன்றுதான். ஆனால் சில சந்தர்ப்பங்களில் மட்டுமே இது அதிக அளவில் உற்பத்தியாகிறது. அப்போதுதான் இது பிரச்னையாக பார்க்கப்படுகிறது.

2. பொடுகுக்கு தலை வறட்சி காரணமாக அல்ல :

இது மக்கள் நம்பிக்கைக்கு முரணாக இருக்கலாம், எதிர்மறையாக தோன்றலாம். ஆனால் தலையில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதும், அதன் விளைவாக ஏற்படும் ஈஸ்ட் போன்ற பூஞ்சைகளும், இறந்த செல்கள் ஏற்படுத்தும் கலவைகளும் பொடுகை உற்பத்தி செய்கின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.

3. குணப்படுத்த முடியாது கட்டுப்படுத்தலாம் :

துரதிருஷ்டவசமாக பொடுகை உடனடியாக குணப்படுத்த முடியாது என்றாலும் கட்டுப்படுத்துவது சுலபம். சில ஷாம்பு மற்றும் கண்டிஷனர்கள் தற்போது மார்கெட்டில் கிடைக்கிறது. இருந்தபோதும் வீடியோவில் இருப்பது போன்று சில இயற்கையான வழிகளை பின்பற்றுவது நல்லது

NO COMMENTS

LEAVE A REPLY