கோழிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை செய்த சிறுவன் கைது

0
402

பாகிஸ்தானில் கோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 14 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இஸ்லாமாபாத்தின் அருகே உள்ள ஜலல்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர், தனது கோழியை 14 வயது சிறுவன் கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை செய்துவிட்டான் என பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் பொலிசார் நடத்திய விசாரணையில், கோழியை பரிசோதனை செய்ததில், அது பாலியல் கொடுமைக்கு ஆளானது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது, அச்சிறுவன் பாலியல் விரக்திக்கு (’sexual frustration’) ஆளாகி இக்காரியத்தில் ஈடுபட்டுள்ளான்.

இயற்கைக்கு மாறான குற்றம் புரிந்த பிரிவின் கீழ் சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY