ஒருதலை காதலால் இளம்பெண் எரித்துக் கொலை: காதலனின் வெறிச்செயல்

0
203

காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் இந்துஜா, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவரை, அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற நபர் காதலிப்பதாக கூறி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் இந்துஜாவோ காதலிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து இந்துஜா தன்னுடைய தாய் மற்றும் சகோதரியிடம் வீட்டின் அருகே நின்று பேசிக்கொண்டிருந்த போது, ஆத்திரத்தில் இருந்த ஆகாஷ் பெட்ரோலை கொண்டு வந்து அவர்கள் மீது ஊற்றி, தீ வைத்துள்ளான்.

இதனால் அலறிய அவர்களை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இருப்பினும் இந்துஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது தாய் மற்றும் சகோதரிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து இந்துஜாவின் உறவினர் கூறுகையில், ஆகாஷும், இந்துஜாவும் ஒரே பள்ளியில் படித்தனர். அப்போதில் இருந்தே ஆகாஷ் இந்துஜாவை காதலித்து வந்தான்.

அதன்பின் இதுகுறித்த தகவல் இந்துஜாவின் பெற்றோருக்கு தெரியவந்தால், அவர்கள் இவனை கண்டித்து அனுப்பியுள்ளனர்.

அதன் பின்னரே அவன் இது போன்ற சம்பவத்தை செய்துள்ளான். இந்துஜாவின் தந்தை, கனடாவில் மென் பொறியாளராகப் பணியாற்றிவருவதாகவும், அவருக்கு தகவல் அனுப்பியுள்ளதாகாவும் தெரிவித்தார்.

மேலும் இந்த செயலை செய்த ஆகாஷ் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகிவிட்டதாகவும், அவனை பொலிசார் தேடிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY