இவற்றில் ஒரு யோகம் இருந்தாலே, உங்கள் வாழ்க்கை வெற்றிதான் பாஸ் !

0
333

ஜோதிட ரீதியாக எத்தனை வகையான யோகங்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொருவருக்கும் எப்படி எப்போது வேலை செய்யும் என ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.வாழ்க்கை ஒரு சிலருக்கு வெற்றிகரமாகவே அமைந்திருக்கும்.

வேறு சிலருக்கு வாழ்க்கையில் எப்போதாவது ஒருமுறைதான் யோகம் வரும். அந்த யோகத்தை அவர்கள் முறையாகப் பயன்படுத்திக்கொண்டால், வாழ்க்கையில் வெற்றியடையலாம்.

ரொம்பவும் மோசமான வாழ்க்கை வாழ்பவர்களுக்குக்கூட ஏதாவது ஒருவகையான யோகம் நிச்சயம் இருந்தே தீரும். அது அவரது ஆயுளில் எப்போது வேலை செய்கிறது என்பதை அறிந்துகொண்டு செயல்பட்டால், நல்லவிதமான பலன்களை அடையலாம். ஜோதிட சாஸ்திரத்தில் 144 வகையான யோகங்கள் இருக்கின்றன.

இவற்றுள் ஏதெனும் ஒன்று, ஒரு மனிதனின் ஜாதகத்தில் நிச்சயம் இருந்தே தீரும். வித்தியாசமான அம்சங்களுடன் கூடிய சிலவகையான யோகங்களை மட்டும் இப்போது பார்ப்போம்.கஜகேசரியோகம்:

ஜாதகத்தில் சந்திரனுக்கு 1,4, 7 மற்றும் 10 ஆம் இடத்தில் குரு அமையப் பெற்றால், இதை கஜகேசரி யோகம் அல்லது குரு சந்திர யோகம் என்பார்கள். இந்த யோகம் அமையப் பெற்றவர்கள் கூடத்தில் முதன்மையானவனாகத் திகழ்வார்கள். எப்படிப்பட்ட இடர்பாட்டிலும் இருந்து தப்பித்து விடுவார்கள்.

கிரகமாலிகா யோகம்

ராகு, கேது நீங்கலாக ஏழு கிரகங்கள் ஏழு வீடுகளில் தொடர்ச்சியாய் நிற்குமானால், அது கிரகமாலிகா யோகம். இந்த யோக அமைப்பில் பிறந்தவர்களுக்குப் பேரும் புகழும் வசதியும், உயர் அந்தஸ்தும் பெருகும்.

கேதார யோகம்

ஜாதகக் கட்டத்தில் 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானம் அல்லாத ஏதேனும் நான்கு வீடுகளில் (ஸ்தானங்களில்) எல்லா கிரகங்களும் பரவலாக நிற்பதால் இந்த யோகம் உண்டாகிறது. இதை ‘சங்க யோகம்‘ என்றும் ‘கேதார யோகம்‘ என்றும் கூறுவார்கள். அரசியல் செல்வாக்குப் பெருகும்.

காமிய யோகம்

லக்னாதிபதி சுபருடன்கூடி பலம் பெற்றிருக்க, 2 ஆம் இடத்தில் குரு, 4 ஆம் இடத்தில் சுக்கிரன், 7 ஆம் இடத்தில் சந்திரன், 11 ஆம் இடத்தில் செவ்வாய் இருக்கும் அமைப்பை, ‘காமிய யோகம்’ என்பார்கள். பொன், பொருள், பூமி ஆகியவற்றைப் பெற்று யோகமாக வாழ்வார்கள். விரும்பியவர்களையே மணந்துகொள்வார்கள்.

கார்முக யோகம்

லக்னத்தில் ஜீவனாதிபதியும் 10 ஆம் இடத்தில் லக்னாதிபதியும் இருந்து லக்னாதிபதிக்கு 7 ஆம் இடத்தில் குரு நின்று இருவரையும் பார்க்கும் அமைப்பை கார்முக யோகம் என்பார்கள். இந்த யோகம் அமையப் பெற்றவர்கள், கல்வி, கேள்வி, ஞானம், உள்ளவர்கள். இந்த யோகம் 27 வயது முதல் எட்டு ஆண்டுகள் நடைபெறும்.

கான யோகம்

ஜாதகக் கட்டத்தில் 9 ஆம் இடத்துக்குரிய பாக்யஸ்தானதிபதி மூன்றிலிருந்து அவரை குரு பார்க்கும் அமைப்புக்குக் கான யோகம் என்று பெயர். இவர்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாயிருப்பார்கள். ஆடை, ஆபரண சேர்க்கை அதிகமிருக்கும். 16 வயதுக்கு மேல் மூன்று ஆண்டுகள் இந்த யோகம் நடக்கும்.கஜகேசரியோகம்:

ஜாதகத்தில் சந்திரனுக்கு 1,4, 7 மற்றும் 10 ஆம் இடத்தில் குரு அமையப் பெற்றால், இதை கஜகேசரி யோகம் அல்லது குரு சந்திர யோகம் என்பார்கள். இந்த யோகம் அமையப் பெற்றவர்கள் கூடத்தில் முதன்மையானவனாகத் திகழ்வார்கள். எப்படிப்பட்ட இடர்பாட்டிலும் இருந்து தப்பித்து விடுவார்கள்.

கிரகமாலிகா யோகம்

ராகு, கேது நீங்கலாக ஏழு கிரகங்கள் ஏழு வீடுகளில் தொடர்ச்சியாய் நிற்குமானால், அது கிரகமாலிகா யோகம். இந்த யோக அமைப்பில் பிறந்தவர்களுக்குப் பேரும் புகழும் வசதியும், உயர் அந்தஸ்தும் பெருகும்.

கேதார யோகம்

ஜாதகக் கட்டத்தில் 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானம் அல்லாத ஏதேனும் நான்கு வீடுகளில் (ஸ்தானங்களில்) எல்லா கிரகங்களும் பரவலாக நிற்பதால் இந்த யோகம் உண்டாகிறது. இதை ‘சங்க யோகம்‘ என்றும் ‘கேதார யோகம்‘ என்றும் கூறுவார்கள். அரசியல் செல்வாக்குப் பெருகும்.

காமிய யோகம்

லக்னாதிபதி சுபருடன்கூடி பலம் பெற்றிருக்க, 2 ஆம் இடத்தில் குரு, 4 ஆம் இடத்தில் சுக்கிரன், 7 ஆம் இடத்தில் சந்திரன், 11 ஆம் இடத்தில் செவ்வாய் இருக்கும் அமைப்பை, ‘காமிய யோகம்’ என்பார்கள். பொன், பொருள், பூமி ஆகியவற்றைப் பெற்று யோகமாக வாழ்வார்கள். விரும்பியவர்களையே மணந்துகொள்வார்கள்.

கார்முக யோகம்

லக்னத்தில் ஜீவனாதிபதியும் 10 ஆம் இடத்தில் லக்னாதிபதியும் இருந்து லக்னாதிபதிக்கு 7 ஆம் இடத்தில் குரு நின்று இருவரையும் பார்க்கும் அமைப்பை கார்முக யோகம் என்பார்கள். இந்த யோகம் அமையப் பெற்றவர்கள், கல்வி, கேள்வி, ஞானம், உள்ளவர்கள். இந்த யோகம் 27 வயது முதல் எட்டு ஆண்டுகள் நடைபெறும்.

கான யோகம்

ஜாதகக் கட்டத்தில் 9 ஆம் இடத்துக்குரிய பாக்யஸ்தானதிபதி மூன்றிலிருந்து அவரை குரு பார்க்கும் அமைப்புக்குக் கான யோகம் என்று பெயர். இவர்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாயிருப்பார்கள். ஆடை, ஆபரண சேர்க்கை அதிகமிருக்கும். 16 வயதுக்கு மேல் மூன்று ஆண்டுகள் இந்த யோகம் நடக்கும்.

கேதாரி யோகம்

குரு, சந்திரன், சுக்கிரன் மூவரும் இரண்டிலிருக்க, அவர்கள் பாக்கியஸ்தானாதிபதி பார்க்க அமையப்பட்ட ஜாதகம் கேதாரி யோகம். இந்த யோகம் 52 வயதுக்குமேல் 7 வருடம் வரை நடந்து ஜாதகரை பிரபலமானவராக மாற்றும்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

NO COMMENTS

LEAVE A REPLY