யாழ்ப்பாணம் மீசாலையில் ரயில் விபத்து – ஒருவர் பலி!

0
284

யாழ்ப்பாணம் மீசாலைப்பகுதியில் இன்று மதியம் ஏற்பட்ட ரயில் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.

மீசாலை பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றதாக எமது ஐ.பி.சி தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மீசாலையில் ரயில் விபத்து - ஒருவர் பலி!

பாதுகாப்பற்ற ரயில் கடவையை மோட்டர் சைக்கிளில் பயணித்த குறித்த நபர் கடக்க முற்றபட்ட வேளை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணம் செய்த அதிவேக ரயிலில் மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி  உருத்திரபுரத்தை சோ்ந்த  தெய்வேந்திரம்  ஞானாயுதன் 38 வயதுடைய ஆண்  ஒருவரே பலியாகியுள்ளார்.சடலம் கொடிகாமம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மீசாலையில் ரயில் விபத்து - ஒருவர் பலி!

NO COMMENTS

LEAVE A REPLY