10 பெண்களை திருமணம் செய்து கொண்ட 70 வயது தாத்தா: 11வது முயற்சியில் கைது

0
801

ஓமன் நாட்டை சேர்ந்த70 வயது அப்துல்லா என்ற முதியவர் 11வது திருமணம் செய்து கொள்வதற்காக ஹைதராபாத் வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அப்துல்லா என்ற முதியவர் ஓமன் நாட்டில் உள்ள மசூதியில் இமாம் ஆக பணியாற்றி வருகிறார்.

இவர், டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுகொள்வதற்காக ஓமனில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ளார்.

அதன்பின்னர் ஹைதராபாத் சென்றவர் அங்கிருக்கும் புரோக்கர்களின் உதவியுடன் திருமணத்திற்கு பெண் தேடியுள்ளார்.

ஹைதராபாத்தில் பண ஆசை மற்றும் வறுமையின் காரணமாக சிறு வயது பெண்களின் குடும்பத்தினரின் மனதை மாற்றி வெளிநாட்டில் இருந்து வரும் ஷேக்குகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக தரகர்கள் செயல்படுகின்றனர்.

தரகர்களின் உதவியுடன் திருமணம் செய்து கொள்ள அப்துல்லா பெண் தேடியுள்ளார். இதற்கிடையில் ஹைதராபாத்தில் அதிகரித்து வரும் இதுபோன்ற திருமணங்கள் பொலிசாருக்கு தெரியவந்ததையடுத்து அவர்கள் விசாரணை நடத்தியதில், சிறுமிகளை ஷேக்குகளுக்கு விற்பனை செய்யும் கும்பலை சமீபத்தில் கைது செய்தனர்.

இந்த கும்பல் கைதானதைத் தொடர்ந்து முதியவர் அப்துல்லாவும் பொலிசாரிடம் சிக்கியுள்ளார். அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்ததில் அவர் இதற்கு முன்னர் 3 முறை ஹைதராபாத்திற்கு வந்துள்ளார்.

இதுவரை 10 பெண்களைதிருமணம் செய்துள்ள அவர், தற்போது 11 வது பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் முயற்சில் ஈடுபட்டுள்ளார், பாஸ்போட்டில் இவரது வயதினை குறைத்து 65 ஆக மாற்றியுள்ளார்.

அதுமட்டுமின்றி, உடல்ரீதியான பிரச்சனைகள் மற்றும் கண்பார்வையும் இவருக்கு சரியாக தெரியவரவில்லை என பொலிசார் கண்டறிந்துள்ளனர்.

தற்போது, இவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY