யாழில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட மாணவிக்கு ஏற்பட்ட அவமானம்! ஒருவர் கைது

0
232

யாழ்ப்பாணம் – மண்டைத் தீவு பகுதியில் விளையாட்டு பயிற்சி ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாடசாலை மாணவிக்கு, நபர் ஒருவர் முத்தம் கொடுத்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை யாழ்.பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.

மண்டைத் தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதாகிய பாடசாலை மாணவி ஒருவருக்கே இந்த அவமானம் ஏற்பட்டுள்ளது.

விளையாட்டரங்கு ஒன்றில் உள்ள அறை ஒன்றில் வைத்து இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறித்த மாணவி தனது பெற்றோரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து பொலிஸில் முறையிட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY