இலங்கையில் 27 வயதுடைய இளம் பெண் ஒருவருக்கு நடந்துள்ள பரிதாப நிலைமை..

0
2065

ஹம்பாந்தொடை – திமுதக போஷித எல பிரதேசத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

வீர்கொடி குருசங்கலாகெ இரேஷா ஷமாலி எனும் 27 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தாயோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண்ணை அவரது கணவர் விட்டுச் சென்றுள்ள நிலையில், இளம் பெண் தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

பெண்ணின் கள்ளக் காதலன் பெண்ணை கொலை செய்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கொலைக்கான காரணங்கள் இதுவரையில் அறிப்படாததுடன், சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைளை ஹம்பாந்தொடை காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக ஹம்பாந்தொடை காவற்துறை தலைமை காரியாலயம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY